Monday, 6 December 2010

What is the Project Base Teaching?

  • பாரம்பரியமாகக் கையாளப்பட்டுவருகின்ற விரிவுரை மூலமான கற்பித்தல் தற்போதும் இருந்து இருகின்றது. அது மாணவர்களிடம் கற்றலில் போதிய ஆர்வத்தை ஏற்படுத்தாமையால் இன்று செயற்பாட்டுடன் கூடிய கற்பித்தல் முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. PBT என்பது செய்ற்பாட்டுக் கற்பித்தல் என்ற பொருள்படுவதுபோல இருப்பினும், அது அதையும் தாண்டி உண்மை உலகிற்கேற்ப மாணவர்களை பல வழிகளிலும் தயார் செய்வதைக் குறிக்கும்.
  • அதாவது பிரச்சினை ஒன்று மாணவர்களிடம் முன்வைக்கப்பட்டு அதற்குத் தீர்வு மாணவர்குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு பின்னர் அத்தீர்வு மாணவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு ஆசிரியரின் வழிகாட்டலுடன் திருத்தியமைக்பட்டு முற்றுப்பெறுவதாக அமையும்.
  • இவ்வாறான PBT ஆனது இன்று Project Base Learning ஆகவும் கொள்ளப்படுகின்றது

இந்தத் தளம் பற்றி

  • மதிப்பார்ந்த ஆசிரியர்களே தற்போதைய காலஓட்டத்தில் சென்று எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவதற்கு நாம் இன்றே தயார்செய்ய வேண்டியுள்ளது. 
  • அதற்காக Project Base Teaching முறைகளைக் கையவேண்டியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறாக நாம் Project Base Teaching ஐ மேற்கொள்ள முடியும் என்பதை உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பதே இந்த இணையத்தளத்தின் நோக்காகும்.
  • Intel Teach Program, ORACL Think Quest என்பன ஆசிரியர்களுக்கான Project Base Teaching துணையை வழங்குகின்றன. 
  • அவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த இணையத்தளமானது தமிழில் உருவாக்கபட்டடுள்ளது. 
  • இதை ஆசிரியர்கள் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதுடன், சிறந்த ஆசிரியர் என்ற புகழும் உங்களுக்கு கிட்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.